by Staff Writer 15-09-2019 | 11:47 AM
Colombo (News 1st) மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஒலி இலுங்கா (Oly Ilunga) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்ட அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
கடந்த வருடம் மாத்திரம் கொங்கோவில் இபோலா வைரஸ் தாக்கத்திற்குட்பட்டு 1000 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதியுதவி காணப்பட்ட போதிலும் இபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காணப்பட்ட சிக்கல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், Oly Ilunga நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தவிர்த்து நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கு முயல்வதாக கிடைத்த தகவலையடுத்து தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், குற்றச்சாட்டுகளை Oly Ilunga மறுத்துள்ளார்.
Oly Ilunga கடந்த ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.