கிணறொன்றிலிருந்து 44 சடலங்கள் கண்டுபிடிப்பு

கிணறொன்றிலிருந்து 44 சடலங்கள் கண்டுபிடிப்பு

by Chandrasekaram Chandravadani 15-09-2019 | 9:56 AM
Colombo (News 1st) மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ (Jalisco) மாநிலத்தில் கிணறு ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த 44 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்நாட்டுத் தடயவியலாளர்களால் இவை கண்டறியப்பட்டுள்ளன. இதேவேளை, கறுப்புப் பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், குவாடலஜாரா (Guadalajara) நகருக்கு வெளியே 119 மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இம்மாத ஆரம்பத்தில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.