ஷாந்த பண்டார மீண்டும் பாராளுமன்றத்திற்கு – வர்த்தமானி வௌியானது

ஷாந்த பண்டார மீண்டும் பாராளுமன்றத்திற்கு – வர்த்தமானி வௌியானது

ஷாந்த பண்டார மீண்டும் பாராளுமன்றத்திற்கு – வர்த்தமானி வௌியானது

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2019 | 1:41 pm

Colombo (News 1st) ஷாந்த பண்டாரவை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த நியமனத்திற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கே ஷாந்த பண்டார மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷாந்த பண்டார இராஜினாமா செய்தமையாலேயே இந்தப் பதவி வெற்றிடம் ஏற்பட்டது.

இந்தப் பதவி வெற்றிடத்திற்கு மீண்டும் ஷாந்த பண்டாரவையே நியமிக்க பரிந்துரைக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஷாந்த பண்டாரவை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்