தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பித்த சுதந்திரக் கட்சி 

தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பித்த சுதந்திரக் கட்சி 

தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பித்த சுதந்திரக் கட்சி 

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2019 | 7:10 am

Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு மாவட்ட ரீதியான பிரசார செயற்பாடுகளை இன்று (15) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அதற்கமைய, முதலாவது பிரசார மாநாடு இரத்தினபுரி நகரில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் தங்களுடைய பிரசார மாநாடு ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மேற்கொள்ளவுள்ள தீர்மானங்கள் தொடர்பிலும் இதன்போது மக்கள் தௌிவுபடுத்தப்படுவார்கள் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்