கடனை மீள செலுத்துவதில் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள இலங்கை

by Staff Writer 14-09-2019 | 8:20 PM
Colombo (News 1st) கடனை மீள செலுத்துவதில் இலங்கை பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச Moody ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையில் நிலவும் வர்த்தகப் போர் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி மந்தகதி ஆனமையால், கடனை மீள செலுத்துவதில் பாரிய சிக்கலை எதிர்நோக்கும் ஆசிய நாடுகளுக்குள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியன காணப்படுகின்றன. கடன் சுமையை தாங்குவதற்கான இயலுமை பலவீனமாகக் காணப்படுதல், அதிகக் கடன் சுமை, அந்நியச் செலாவணி கடனை சார்ந்திருத்தல் போன்ற காரணங்களினால் மாற்றமடையும் நிதி நிபந்தனைகளுக்கு நாட்டின் கடன் விபரங்கள் வௌிக்கொணரப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை, பாகிஸ்தான், எகிப்து, அங்கோலா மற்றும் கானா ஆகிய நாடுகளில் வட்டி செலுத்துதல் மற்றும் வருமான விகிதங்களில் குறிப்பிடத்தக்களவு சரிவு ஏற்பட்டுள்ளதாக Moody நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.