மீண்டும் நடிக்கவுள்ள அசின்

மீண்டும் நடிக்கவுள்ள அசின்

மீண்டும் நடிக்கவுள்ள அசின்

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2019 | 5:46 pm

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அசின் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

தமிழில் நடித்து வந்த அசின் திடீர் என்று இந்தியில் நடிக்க சென்றார். இந்தியில் ரீமேக் ஆன கஜினி படத்தில் அமிர் கானுடன் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்து ஐந்தாறு படங்களில் மட்டுமே இந்தியில் நடித்துவிட்டு தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் முடித்து, சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

ஒரு பெண் குழந்தைக்கு தாயான அசின, இனிமேல் நடிக்க வரமாட்டார் என்று ரசிகர்கள் முடிவு செய்திருந்த நிலையில், அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை, கணவருடன் இருக்கும் படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் அசின், சமீபத்தில் ஒரு படத்தை பகிர்ந்தார். அதில் அவரது உடல் தோற்றம், முகச்சாயல் எல்லாமே மாறிவிட்டது.

இந்த படம் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி உள்ளது. ரீ என்ட்ரிக்கு தயாராகி இருக்கும் அசினை விரைவில் இந்தி படத்தில் பார்க்கலாம், தமிழ் படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் காத்திருக்கிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்