தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2019 | 5:10 pm

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பாடசாலைகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும் அதில் தேர்வாகாத மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நாளில் இருந்து இரண்டு மாத காலத்திற்குள் மறு தேர்வு நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தம் 2019 மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்