கொச்சிக்கடை தேவாலய தாக்குதல்: முழுமையான பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

கொச்சிக்கடை தேவாலய தாக்குதல்: முழுமையான பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2019 | 9:00 pm

Colombo (News 1st) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலிஅங்க குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் மூன்றிலும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலும் சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் தொடர்பிலும் முன்னெடுக்கப்பட்ட குற்ற விசாரணை அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

வெடிச்சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலிஅங்க சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்