ஹெரோயின் இறக்குமதி: பாகிஸ்தான் பிரஜைகள் எழுவருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் இறக்குமதி: பாகிஸ்தான் பிரஜைகள் எழுவருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் இறக்குமதி: பாகிஸ்தான் பிரஜைகள் எழுவருக்கு ஆயுள் தண்டனை

எழுத்தாளர் Staff Writer

13 Sep, 2019 | 4:18 pm

Colombo (News 1st) நாட்டிற்கு ஹெரோயின் இறக்குமதி செய்தமை, அவற்றை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாகிஸ்தான் பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு நீதவானால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டதற்கு அமைய அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய சந்தேகநபர்கள் 4 பேரும் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு வழிமுறைகளில் விமானத்தினூடாக சுமார் 3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை சந்தேகநபர்கள் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்