ஜப்பான் அரசாங்கத்தால் இலங்கைக்கு நிதியுதவி

ஜப்பான் அரசாங்கத்தால் இலங்கைக்கு 1 பில்லியன் யென் நிதியுதவி

by Staff Writer 13-09-2019 | 3:32 PM
Colombo (News 1st) மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்குமான பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. சரிவை சந்தித்துள்ள இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் 1 பில்லியன் ஜப்பான் யென் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இது தொடர்பான மானிய உதவிக்கான பரிமாறல் ஆவணப்பத்திரம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.