வைத்தியர் அனில் ஜாசிங்கவிற்கு ஆணைக்குழு அழைப்பு

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 12-09-2019 | 8:03 AM
Colombo (News 1st) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (12) ஆஜராகுமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதிக்குப் புறம்பாக செயற்பட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அறுவைச் சிகிச்சை கையுறைகளை வழங்குவதில் முன்னெடுத்துள்ள முறைகேடுகள் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சுங்கப் பணிப்பாளர் நாயகம் P.S.M. சார்ள்ஸ் அல்லது பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர், இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தங்கச்சுரங்களிலிருந்து பெறப்பட்ட மண்ணை, சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்தமை குறித்து ஓய்வுபெற்ற சுங்கப் பணிப்பாளர் நாயகம் M. குணரத்னவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலான கோப்புகளை ஒப்படைக்குமாறு தெரிவித்தே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.