ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக போட்டியிடுவது சிறந்தது: சந்திரிக்கா

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக போட்டியிடுவது சிறந்தது: சந்திரிக்கா

எழுத்தாளர் Bella Dalima

12 Sep, 2019 | 7:30 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மிகவும் சிறந்த விடயம் என அக்கட்சியின் ஆலோசகர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

தாமரை மொட்டை விரட்ட வேண்டும் என்று தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் தாமரை மொட்டுடன் பற்றுக்கொள்ள முயல்கின்றனர். அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்பட முடியாது என குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அச்செயற்பாட்டுடன் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என குறிப்பிட்டார்.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட நிட்டம்புவ, கொலதெனிய குளத்தை திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்