விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டு நாட்டிற்கு சேவையாற்றுமாறு அஸ்கிரிய பீடம் சஜித் பிரேமதாசவிற்கு ஆலோசனை

விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டு நாட்டிற்கு சேவையாற்றுமாறு அஸ்கிரிய பீடம் சஜித் பிரேமதாசவிற்கு ஆலோசனை

விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டு நாட்டிற்கு சேவையாற்றுமாறு அஸ்கிரிய பீடம் சஜித் பிரேமதாசவிற்கு ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 8:20 pm

Colombo (News 1st) விமர்சனங்களை பொறுமையுடன் தாங்கிக்கொண்டு நாட்டிற்கு சேவையாற்றுமாறு அஸ்கிரிய பீடம் இன்று சஜித் பிரேமதாசவிற்கு ஆலோசனை வழங்கியது.

அஸ்கிரிய மகா விகாரையின் மேற்கு நுழைவாசல் திறப்பு விழா நிகழ்வு இன்று முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் சஜித் பிரேமதாச புத்த சாசனத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றும் பணிகளை கௌரவிக்கும் வகையில் இதன்போது நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

சஜித் பிரேமதாச மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரையும் இன்று சந்தித்து ஆசி பெற்றார்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி மல்வத்து பீடம் சஜித் பிரேமதாசவின் சமய மற்றும் சமூக சேவையைப் பாராட்டி ‘சாசன தீபன அபிமானி ஸ்ரீலங்கா ஜன ரஞ்சன’ என்ற கௌரவ நாமத்தை வழங்கியிருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்