மரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு

மரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு

மரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 11:14 am

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் வட மாகாணத்தில் சுமார் 95 வீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் வட மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89 வீதமானோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு இணங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டம் முழுவதும் பரவியுள்ள போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், நாட்டை நேசிக்கும் அனைத்துப் பிரஜைகளும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக அணிதிரள வேண்டும் என வட மாகாண மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்