நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்

நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்

நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 5:06 pm

Colombo (News 1st) அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Avant Garde Maritime Services நிறுவனத்திற்கு சொந்தமான N.V. அவன்ற் கார்ட் என்ற கப்பலில் அனுமதியின்றி , சட்டவிரோதமாக 816 தன்னியக்க துப்பாக்கிகள் 2935 ரவைகள் ஆகியவற்றை களஞ்சியப்படுத்தியமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 7573 குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்த, தம்மிக்க கனேபொல, ஆதித்ய படபெதி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய நீதிபதிகள் குழாம் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்