ஜனாதிபதித் தேர்தல்: சமூக வலைத்தளங்களை கண்காணிக்குமாறு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல்: சமூக வலைத்தளங்களை கண்காணிக்குமாறு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல்: சமூக வலைத்தளங்களை கண்காணிக்குமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 10:06 am

Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு ஆயிரக்கணக்கான போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களினூடனூடாக பல தரப்பினருக்கும் எதிராக அவதூறை ஏற்படுத்தும் மற்றும் குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வௌியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்