இலங்கை – டோகோ இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கை – டோகோ இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 9:39 am

Colombo (News 1st) இலங்கைக்கும் மேற்கு ஆபிரிக்காவின் டோகோ (Togo) அரசாங்கத்துக்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள டோகோ ஜனாதிபதி பௌயர் னஸிங்பே (Faure Gnassingbe) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வரவேற்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பது குறித்த இலங்கை அரசாங்கத்தின் துரித நடவடிக்கைகள் தொடர்பில், டோகோ ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் நாட்டிலுள்ள முன்னணி வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக டோகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச பயங்கரவாதம் தொடர்பிலான சம்மேளனத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் தௌிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்