இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 9:07 am

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் விஜயத்துக்கு முன்னர் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மீண்டும் ஒருதடவை ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

இந்த விஜயம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விடுத்த எச்சரிக்கை தொலைத்தொடர்புகள் அமைச்சின் ஊடாக தமக்கு கிடைத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்றிரவு (11) விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பிரதமர் அலுவலகத்துக்கு நம்பிக்கைக்குரிய தகவலொன்று கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த நிலைமையின் கீழ் பாகிஸ்தான் விஜயத்துக்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பரிசீலிக்குமாறு தமக்கு ஆலோசனை கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்