அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் ஒப்படைப்பு

அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் ஒப்படைப்பு

அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 3:25 pm

Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பான ஆவணங்கள் சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் வௌிவிவகார அமைச்சிடம் இந்த ஆவணங்கள் வழங்கப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் அதன் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்துவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 6 ஆம் திகதி கையொப்பமிட்டார்.

அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்குத் தேவையான 21,000 பக்கங்களைக் கொண்ட ஆவணத்தை சட்ட மா அதிபர் திணைக்களம் தயார் செய்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்