வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2019 | 11:33 am

Colombo (News 1st) இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சி வன்முறையில் ஈடுபடுவதாகத் தெரிவித்து இன்று மாநிலத்தில் பேரணியொன்றுக்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவை ஆட்சி புரியும் YSR காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், YSR காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பேரணி நடத்த முயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்