ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் திடீர் சந்திப்பு

ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் திடீர் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

11 Sep, 2019 | 8:44 pm

Colombo (News 1st) அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று பிற்பகல் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமான இந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் வருகை தந்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

கலந்துரையாடல் நிறைவுபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

அலரி மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வின் பின்னர் இது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கட்சியை மேம்படுத்தி பின்னர் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்போம் என பேசப்பட்டது. ஒவ்வொரு குழுக்களின் ஆதரவு தொடர்பிலும் நாங்கள் கவனம் செலுத்தினோம். வெற்றிபெறும் வேட்பாளரை நிறுத்தி நாங்கள் இறுதியில் வெற்றி பெறுவோம்

என அவர் பதிலளித்தார்.

மேலும், ராஜபக்ஸக்களைத் தவிர ஏனைய அனைவரும் ஒன்றிணையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்