மீண்டும் தலைதூக்கும் மலேரியா

மீண்டும் தலைதூக்கும் மலேரியா

மீண்டும் தலைதூக்கும் மலேரியா

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2019 | 3:15 pm

Colombo (News 1st) மலேரியா நோய் மீண்டும் நாட்டில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரத்தில் மாத்திரம் மலேரியா நோயாளர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர், டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டிற்கு சென்று திரும்புவோரால் மலேரியா நோய் பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 28 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவற்றில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் காணப்படுவதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது மலேரியா தடுப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்