மன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் எழுவர் கைது

மன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் எழுவர் கைது

மன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் எழுவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

11 Sep, 2019 | 5:10 pm

Colombo (News 1st) மன்னார் – எழுத்தூர் பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மன்னாரை சேர்ந்த 20 தொடக்கம் 29 வயதிற்கு இடைப்பட்ட 7 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்