நியமனத்தில் முறைகேடு: கல்விசாரா ஊழியர்கள் சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம்

நியமனத்தில் முறைகேடு: கல்விசாரா ஊழியர்கள் சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம்

நியமனத்தில் முறைகேடு: கல்விசாரா ஊழியர்கள் சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2019 | 12:46 pm

Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான புதிய நியமனத்தில் முறைகேடு நிலவுவதாகத் தெரிவித்து சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்களால் இந்த சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக முன்றலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் பதவி வெற்றிடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் அனுப்பிவைக்கப்பட்ட பெயர்ப் பட்டியல், உயர்கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், நியமனத்தில் தங்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்