ஜனாதிபதி வேட்பாளருக்கு அமெரிக்காவில் 18 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வீடு

ஜனாதிபதி வேட்பாளருக்கு அமெரிக்காவில் 18 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வீடு

எழுத்தாளர் Bella Dalima

11 Sep, 2019 | 9:11 pm

Colombo (News 1st) இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு அமெரிக்காவில் 18 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வீடு ஒன்று இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதென பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

கலிபோர்னியாவில் இருந்து புலனாய்வுத் தகவல்களை வழங்கும் தனது நண்பர் இவ்விடயத்தைக் கூறியதாக ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.

மேலும், புத்தம் புதிய இவ்வீடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் இலங்கைக்கு மிகப்பெரிய தகவல் ஒன்று கிடைத்தது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளின் பெருமளவு பணம் துபாய் வங்கிகளில் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தப் பணம் திடீரென மாயமானது. அவர்கள் அனுப்பிய கடவுச்சீட்டைக் கொண்டு உதயங்க வீரதுங்க பல தடவைகள் லொஸ் ஏஞ்சல்சுக்கு சென்று வந்துள்ளார். அவ்வாறு சென்ற ஒரு சந்தர்ப்பத்திலேயே அகப்பட்டார். இந்த பணத்தை நிதித்தூய்தாக்கல் செய்து வீடுகள், தோட்டங்களைக் கொள்வனவு செய்து வைத்திருக்கலாம் என நாம் சந்தேகிக்கின்றோம். இது குறித்து ஆராய வேண்டும். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு நாளும் இவற்றைக் கண்டுபிடிக்க முடியாது.

என ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.

இன்று முற்பகல் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களை வௌிக்கொணர்ந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்