சுதந்திரக் கட்சிக்கு பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே

சுதந்திரக் கட்சிக்கு பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே

எழுத்தாளர் Bella Dalima

11 Sep, 2019 | 10:24 pm

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்துத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து கோரிக்கைகளுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. மொட்டு என்ற விடயத்தை வைத்து தயாசிறி ஜயசேகர தொங்கிக்கொண்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி வேட்பாளரும் கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சியினரும் கூடி சின்னம் தொடர்பில் கலந்துரையாடினோம். எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பது தற்போது நாட்டிலுள்ள பாரிய அரசியல் சக்தி என அனைவரும் கூறினர்

என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்