கோட்டையிலிருந்து புலஸ்தி நகர்சேர் கடுகதி ரயில் சேவை

கோட்டையிலிருந்து புலஸ்தி நகர்சேர் கடுகதி ரயில் சேவை

கோட்டையிலிருந்து புலஸ்தி நகர்சேர் கடுகதி ரயில் சேவை

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2019 | 9:44 am

Colombo (News 1st) கொழும்பு – கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை இன்று (11) முதல் புதிய ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளது.

இந்த ரயிலுக்கு புலஸ்தி நகர்சேர் கடுகதி ரயில் என பெயரிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாளாந்தம் பிற்பகல் 3.05 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்படவுள்ள ரயில், இரவு 7.47 மணிக்கு பொலன்னறுவை ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.

மீண்டும் பொலன்னறுவையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ள குறித்த ரயில், காலை 9.08 மணிக்கு கோட்டையை வந்தடையவுள்ளது.

பொல்கஹவெல, குருநாகல், மஹவ, கலாவெவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரன்கொட ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் புலஸ்தி ரயில் நிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்