காட்டு யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பலி

காட்டு யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பலி

காட்டு யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பலி

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2019 | 7:08 am

Colombo (News 1st) அம்பாறை சுஹதகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி ஒருவரும் வயோதிபப் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு (10) 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 வயதான சிறுமியும் 50 வயதான குறித்த சிறுமியின் பாட்டியுமே இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள சந்தைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புகையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்