ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2019 | 10:36 am

Colombo (News 1st) நுகர்வுக்கு உதவாத 18 000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை – ஶ்ரீவிக்ரம மாவத்தை பகுதியிலுள்ள தனியார் நிறுவன களஞ்சியசாலை ஒன்றிலிருந்தே கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, அங்கிருந்த 2 நவீன தராசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கழிவுத் தேயிலை மறைத்துவைக்கப்பட்டிருந்த களஞ்சியாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்