ப்ளூமெண்டல் சங்காவிற்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ப்ளூமெண்டல் சங்காவிற்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ப்ளூமெண்டல் சங்காவிற்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2019 | 3:54 pm

Colombo (News 1st) பாதாள உலகக்குழுவின் தலைவரான ப்ளூமெண்டல் சங்கா எனப்படும் ரணசிங்க ஆராச்சிகே சங்கா என்பவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா த சில்வா விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபரான ப்ளூமெண்டல் சங்கா இந்தியாவிலிருந்து இன்று வருகை தந்ததுடன், தனது சட்டத்தரணியூடாக அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கொலை சம்பவம் தொடர்பில் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் மன்றில் இன்று ஆஜராகியுள்ளார்.

ப்ளூமெண்டல் பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் “களுபோலே” என்பவரை கொலை செய்தமை தொடர்பில் ப்ளூமெண்டல் சங்காவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்