விடைத்தாள் மதிப்பீடு; மூடப்படும் பாடசாலைகள் விபரம்

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு; மூடப்படும் பாடசாலைகள் விபரம் இதோ...

by Staff Writer 09-09-2019 | 3:51 PM
Colombo (News 1st) உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட 4 பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்தக் காலப்பகுதிக்குள் 23 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு ஆனந்தா கல்லூரி கண்டி வித்தியாரத்ன வித்தியாலயம் மாத்தறை மஹனாமா கல்லூரி குருநாகல் லக்தாஸ் டி மெல் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளன. இதேவேளை, மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி வேம்படி உயர் மகளிர் கல்லூரி வவுனியா சைவப் பிரகாசம் மகா வித்தியாலயம் அநுராதபுரம் சென்.ஜோசப் மகா வித்தியாலயம் பதுளை தர்மதூத வித்தியாலயம் குருநாகல், வட மேல் ரோயல் கல்லூரி கொழும்பு D.S. சேனாநாயக்க கல்லூரி கொழும்பு விசாகா வித்தியாலயம் கொழும்பு லும்பினி வித்தியாலயம் கம்பஹா யசோதரா தேவி மகா வித்தியாலயம் கம்பஹா பண்டாரவத்த பராக்கிரம மகா வித்தியாலயம் களுத்துறை திஸ்ஸ வித்தியாலயம் களுத்துறை வேலாப்புற வித்தியாலயம் கேகாலை சென்.ஜோசப் மகளிர் கல்லூரி குளியாப்பிட்டி சாராநாத் மகா வித்தியாலயம் கண்டி புஷ்பதான மகளிர் வித்தியாலயம் கண்டி உயர் மகளிர் கல்லூரி கண்டி மஹானாம கல்லூரி மாத்தறை சென்.தோமஸ் உயர் மகளிர் கல்லூரி இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி காலி சுதர்மா வித்தியாலயம் ஆகியன பகுதியளவில் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது முழுமையாக மூடப்படும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.