​ஹொரவப்பொத்தானை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் துரிதம்

​ஹொரவப்பொத்தானை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் துரிதம்

​ஹொரவப்பொத்தானை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் துரிதம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Sep, 2019 | 10:00 am

Colombo (News 1st) ஹொரவப்பொத்தானை பகுதியில் நோய்களை குணப்படுத்துவதாகத் தெரிவித்து நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் இருவர் உயிரிழந்தமை தொடர்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்த நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹொரவப்பொத்தானை பகுதியிலுள்ள பாடசாலை மைதானமொன்றில் நோய்களை குணப்படுத்துவதாகத் தெரிவித்து நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்த பக்கவாத நோயாளர் ஒருவரும் இருதய நோயாளர் ஒருவரும் நேற்று உயிரிழந்தனர்.

இதன்போது மேலும் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வெப்பம் காரணமாக இவர்களின் மரணம் சம்பவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்