மஹிந்த தேஷப்பிரிய இன்று விசேட சந்திப்பில்

மஹிந்த தேஷப்பிரிய இன்று விசேட சந்திப்பில்

மஹிந்த தேஷப்பிரிய இன்று விசேட சந்திப்பில்

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Sep, 2019 | 10:12 am

Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணையாளர்களுக்கும் இடையில் இன்று (09) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக, நியமிக்கப்படும் நபரின் பெயர் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வேட்பாளரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்