மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று

மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று

மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Sep, 2019 | 1:23 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது.

சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைறுகின்ற கூட்டத்தொடரில் இலங்கையைச் சேர்ந்த சில தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி அலுவலகத்தின் பிரதிநிதிகள் சிலர் கலந்துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவந்தி தெல்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அறிக்கை ஒன்றும் இந்தத் தடவை ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்