புயலில் சிக்குண்ட ஜப்பான் – இயல்புநிலை பாதிப்பு

புயலில் சிக்குண்ட ஜப்பான் – இயல்புநிலை பாதிப்பு

புயலில் சிக்குண்ட ஜப்பான் – இயல்புநிலை பாதிப்பு

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Sep, 2019 | 10:18 am

Colombo (News 1st) ஜப்பான் தலைநகரை தாக்கிய டக்ஸியா புயலினால் பலத்த மழை பெய்வதுடன் மணித்தியாலத்திற்கு 210 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுகின்றது.

டோக்கியோவின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யக்கூடும் என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் புலட் ரயில்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

புயலினால் ஜப்பான் தலைநகரிலுள்ள சுமார் 2 90 000 வீடுகளுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண ரக்பி போட்டிகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையிலேயே இவ்வாறு புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக போட்டியில் கலந்துகொள்ளும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில அணிகள், ஜப்பானுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்