தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்

தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்

தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2019 | 8:38 pm

Colombo (News 1st) பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர்.

இதன்படி நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, திசர பெரேரா, அகில தனஞ்சய, லசித் மாலிங்க, எஞ்சலோ மெத்தியூஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் பாதுகாப்புக் கருதி பாகிஸ்தான் கிரிக்கெட் விஜயத்தில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான பாதுகாப்பு தொடர்பில் வீரர்களைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வீரர்கள் கலந்துகொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தத் தொடருக்காக விசேட ஏற்பாடுகளை செய்துள்ளதாக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.

அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடப்படவுள்ள 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளையும் கராச்சி மற்றும் லாகூரில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடரில் பங்கேற்பது தொடர்பில் முழுமையான சுதந்திரம் இலங்கை அணி வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.

இதன்படி நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, திசர பெரேரா, அகில தனஞ்சய, லசித் மாலிங்க, எஞ்சலோ மெத்தியூஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் கிரிக்கெட் விஜயத்தில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்