ஆணைக்குழுவில் ஆஜராகும் அமைச்சர் காமினி

ஆணைக்குழுவில் ஆஜராகும் அமைச்சர் காமினி

ஆணைக்குழுவில் ஆஜராகும் அமைச்சர் காமினி

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Sep, 2019 | 10:02 am

Colombo (News 1st) அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவை இன்று (09) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹபொல நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

மஹபொல நிதியத்தில் மோசடி இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அதன் உறுப்பினராக செயற்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுணுகமவும் உறுப்பினராக செயற்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மஹபொல நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பான முறைப்பாட்டை முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ முன்வைத்துள்ளார்.

இது தொடர்பான மற்றுமொரு முறைப்பாட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கேஷரலால் குணசேகர முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்