அருவைக்காட்டிற்கு சென்ற 2 லொறிகள் மீண்டும் விபத்து

அருவைக்காட்டிற்கு சென்ற 2 லொறிகள் மீண்டும் விபத்து

அருவைக்காட்டிற்கு சென்ற 2 லொறிகள் மீண்டும் விபத்து

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Sep, 2019 | 10:05 am

Colombo (News 1st) கொழும்பில் இருந்து புத்தளம் – அருவைக்காட்டிற்கு கழிவுகளை ஏற்றிச்சென்ற 2 லொறிகள் நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளன.

புத்தளம் – கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்றிரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கழிவுகளுடன் அதிக வேகத்தில் பயணித்த லொறியொன்று, மற்றுமொரு லொறியுடன் மோதியுள்ளது.

விபத்தின் போது தொழில்நுட்ப கோளாறுக்குள்ளான லொறியொன்று, மற்றுமொரு வாகனத்தின் உதவியுடன் முந்தல் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்