வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மனோஜ் சிறிசேன

வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மனோஜ் சிறிசேன

வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மனோஜ் சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2019 | 7:47 am

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர காலமானதை அடுத்து, ஏற்பட்டுள்ள மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ​பதவி வெற்றிடத்திற்கு மனோஜ் சிறிசேன பெயரிடப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

மனோஜ் சிறிசேன ஏற்கனவே தென் மாகாண சபையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், கலாசார மற்றும் கலைத்துறை விவகாரம், சமூக நலன்புரி, சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகாரம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வீடமைப்பு, மனிதவள மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்