வனங்களைப் பாதுகாப்பதில் சவால்

வனங்களைப் பாதுகாப்பதில் சவால்

வனங்களைப் பாதுகாப்பதில் சவால்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2019 | 1:36 pm

Colombo (News 1st) காடுகளில் தீ வைப்பதால், வனங்களைப் பாதுகாப்பதில் சவாலை எதிர்நோக்கியுள்ளதாக வனபாதுகாப்புத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மாதத்தில் மாத்திரம் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் காடுகளுக்கு தீ வைக்கப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் W.A.C. வேரகம தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மலையகப் பகுதிகளில் உயிர்பல்வகைமை பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காடுகளுக்கு தீ வைப்பது, மலையகப் பகுதியில் மண்சரிவு ஏற்படுவதற்கும் காரணமாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் காடுகளுக்கு தீ வைக்கப்படுவதாக வனபாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, காடுகளுக்குத் தீ வைப்பவர்களை கைது செய்வதற்காக, பொலிஸாருடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வனபாதுகாப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்