தலிபான்களுடனான சமாதான உடன்படிக்கை இரத்து – ட்ரம்ப்

தலிபான்களுடனான சமாதான உடன்படிக்கை இரத்து – ட்ரம்ப்

தலிபான்களுடனான சமாதான உடன்படிக்கை இரத்து – ட்ரம்ப்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2019 | 8:46 am

Colombo (News 1st) தலிபான்களுடனான சமாதான உடன்படிக்கையை இரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி மற்றும் தலிபான் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்களை இன்று சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கன் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து இந்த சமாதான உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.

தலிபான்களுடனான சில நிபந்தனைகள் மற்றும் விதிகளைக் கொண்ட சமாதான உடன்படிக்கை, கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆப்கன் – அமெரிக்காவிற்கு இடையிலான நல்லிணக்கத் தூதுவரான ஸல்மே கலீல்ஸாட் இதனை வௌியிட்டார்.

குறித்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானிலிருந்து எதிர்வரும் 20 வாரங்களுக்குள் அமெரிக்காவின் 5400 படையினரை மீள அழைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பே வௌியிடுவார் எனவும் ஸல்மே கலீல்ஸாட் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் தற்போது அமெரிக்காவின் 14000 படையினர் நிலைகொண்டுள்ளனர்.

இந்நிலையில், தலிபான்களுடனான சமாதான உடன்படிக்கையை இரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்