சேற்றில் புதைந்த மூவர் – காப்பாற்றிய இராணுவத்தினர்

சேற்றில் புதைந்த மூவர் – காப்பாற்றிய இராணுவத்தினர்

சேற்றில் புதைந்த மூவர் – காப்பாற்றிய இராணுவத்தினர்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Sep, 2019 | 5:12 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – பூநகரி அரசப்புறக்குளத்தில் நீராடச் சென்று சேற்றில் புதையுண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இராணுவத்தினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி – பூநகரி நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்களே சேற்றில் புதையுண்டுள்ளனர்.

சேற்றில் புதையுண்டு மயக்கமடைந்திருந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டு பூநகரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்