ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்?

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2019 | 7:28 am

Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தரப்பில் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை சிரச FM இல் ஒலிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தவிர, கூட்டமைப்பிலிருந்தும் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளாரா என இதன்போது பொதுச் செயலாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளரை நியமிக்க முடியும் எனவும் தமக்கு இரு வழிகள் காணப்படுவதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

அத்துடன், கூட்டமைப்பின் ஊடாகவும் வேட்பாளரை நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்