மரக்கறிகளின் விலை குறைவு

மரக்கறிகளின் விலை குறைவு

by Staff Writer 07-09-2019 | 4:02 PM
Colombo (News 1st) நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட தற்போது வெகுவாகக் குறைவடைந்துள்ளது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் அடிப்படையில், கோவா ஒரு கிலோ 50 ரூபாவிற்கும் கரட் ஒரு கிலோ 50 தொடக்கம் 60 ரூபா வரையிலும் லீக்ஸ் ஒரு கிலோ 40 தொடக்கம் 60 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சீரற்ற காலநிலையினால் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.