கருகும் பனைகள்: பலரின் வாழ்வாதாரம் அபாயத்தில்

by Staff Writer 07-09-2019 | 7:27 PM
Colombo (News 1st) யாழ். குடாநாட்டின் வருமானம் ஈட்டும் நீண்டகால பயிராகக் காணப்படும் பனைகளுக்கு ஒரு வகை நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - புங்குடுதீவு, 7 ஆம் வட்டாரத்தில் பனைகள் பல ஒருவகை நோயினால் அழிவடைந்து வருகின்றன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பனைகள் கருகி நிலத்தில் வீழ்ந்த நிலையில் காணப்படுகின்றன. பனைகளுக்கு இதுவரையில் ஏற்படாத தீடீர் நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பனை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால் பனையிலிருந்து பயன் பெறும் பலரின் வாழ்வாதாரம் பாதிப்படையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பனைக்கு ஏற்பட்டிருக்கும் ​நோய்த்தாக்கம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழத்தின் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறை மாணவர்களும் பனை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி உத்தியோத்தர்களும் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.