களனி மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

களனி மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

களனி மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2019 | 3:29 pm

Colombo (News 1st) களனி மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி கங்கையின் தெற்கு பகுதில் முன்னெடுக்கப்படவுள்ள நீர் விநியோக கட்டமைப்பின் நிர்மாணப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், வத்தளை – மாபொல , கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் வத்தளை – மஹர மற்றும் ஜா-எல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலும் கம்பஹா பிரதேச சபை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்