ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் – சஜித் பிரேமதாச இடையில் சந்திப்பு

ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் – சஜித் பிரேமதாச இடையில் சந்திப்பு

ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் – சஜித் பிரேமதாச இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2019 | 4:22 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரம் தொடர்பில் இதன்போது பிரதானமாக கலந்துரையாடப்படவுள்ளதுடன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்படவுள்ளதாக அமைச்சர் அஜித் பீ. பெரேரா கூறினார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமாதாசவிற்கு இடையில் நாளை (08) சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்