எல்பிட்டியவில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

எல்பிட்டியவில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

எல்பிட்டியவில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2019 | 3:36 pm

Colombo (News 1st) எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதகல பகுதியில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தனது மனைவியுடன் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுள்ளதுடன், நேற்றிரவு மனைவியின் வீட்டுக்கு சென்று கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில், மோதல் வலுப்பெற்றதையடுத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 28 வயதான குறித்த நபரின் மனைவி மற்றும் மனைவியின் 59 வயதான தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று எல்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்