வட மாகாண சபையின் சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் பதில் செயலாளராக கே.தெய்வேந்திரம் நியமனம்

வட மாகாண சபையின் சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் பதில் செயலாளராக கே.தெய்வேந்திரம் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

06 Sep, 2019 | 7:43 pm

Colombo (News 1st) வட மாகாண சபையின் சுகாதார சுதேச மருத்துவ, நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக கே.தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கே.தெய்வேந்திரம் கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்