மற்றுமொரு ஹிந்தி பட ரீமேக்கில் அஜித்?

மற்றுமொரு ஹிந்தி பட ரீமேக்கில் அஜித்?

மற்றுமொரு ஹிந்தி பட ரீமேக்கில் அஜித்?

எழுத்தாளர் Bella Dalima

06 Sep, 2019 | 4:53 pm

அண்மையில் வெளியான ஆர்டிகிள் 15 ஹிந்திப் படம் அதிகக் கவனத்தைப் பெற்றதோடு, இந்தியாவில் 64 கோடி ரூபாவை வசூலித்தது.

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, இஷா தல்வார், சயானி குப்தா, குமுத் மிஸ்ரா, மனோஜ் போன்றோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார். இதையடுத்து, ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தனுஷ் முயற்சித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், போனி கபூருக்கு அந்த உரிமை கிடைத்துள்ளதால் நேர்கொண்ட பார்வை, வினோத் இயக்கும் புதிய படம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக போனி கபூரின் தயாரிப்பில், ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்